39. கூற்றுவ நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 39
இறைவன்: ஆதித்தேஸ்வரர்
இறைவி : பன்னீர்மொழியாள்
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : களந்தை
முக்தி தலம் : களந்தை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - திருவாதிரை
வரலாறு : திருக்களந்தை என்னும் பதியில் அவதாரம் செய்த குறுநில மன்னர். பல மன்னர்களை வென்றார். தமக்கு முடி சூட்டுமாறு தில்லை வாழ் அந்தணர்களை இவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்தனர். இறைவனே தனது திருவடியை இவர் முடி மீது சூட்டினார்.
முகவரி : அருள்மிகு. ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், களப்பால், கோட்டூர் – 614710 மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. விஸ்வநாதன்
தொலைபேசி : 04367-277279

இருப்பிட வரைபடம்


வென்றி வினையின் மீக்கூர 
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச் 
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம் 
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு 
வெல்லாம் உடைய ராயினார்.
   - பெ.பு. 3937
பாடல் கேளுங்கள்
 வென்றி வினையின்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க